நம் உடல் தானாகவே வெப்பநிலையை சமநிலையில் வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. நாம் சூடான வெப்பமான இடத்தில் இருக்கும்போது உடல் வியர்வை மூலம் குளிர்ச்சியடையும். குளிர்ச்சியான சூழலில் இருக்கும்போது நம் உடல் நடுங்கி வெப்பத்தை உற்பத்தி செய்யும். இது இயற்கையாகவே காலநிலைக்கு ஏற்ப நம் உடல் மாறும்.
எனவே உடல் சூட்டுக்கும் சிக்கனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதில் இருந்து தெளிவாக தெரிந்துவிடும். சிக்கன் உடல் சூடு சம்பந்தம் குறித்து மருத்துவர் கூறுவதை பார்ப்போம்.
சிக்கன் சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரிக்கும் என்று நம்மில் பலரும் பரவலாக நம்ப கூடிய ஒன்றாக உள்ளது. எந்த உணவு சாப்பிட்டாலும் அதனுடன் தகுந்த அளவிற்கு நார்ச்சத்து சேர்த்து கொள்ள வேண்டும்.சிக்கனை சாப்பிடுவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. சிக்கன் சூடு என்பது அந்த உணவின் தன்மை அல்ல அது காட்டும் அறிகுறி ஆகும்.
சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகுமா? | EOT 066 | Dr. Arunkumar
எனவே எப்போதும் சிக்கன் சாப்பிடும் போது அதனுடன் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் சிறு தானியங்களை சேர்த்து கொள்வது நல்லது.
எனவே, சிக்கன் சாப்பிடுவதால் மட்டுமே உடல் சூடு அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது. உடல் வெப்பம் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். புரத தேவையை பூர்த்தி செய்ய சிக்கனை உணவில் தாராளமாக சேர்க்கலாம். இருப்பினும் மருத்துவர் கூறுவது போல சிக்கன் சாப்பிடும்போது செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“