அசைவம் பலருக்கும் பிடிக்கும். சிக்கன், மட்டன், மீன், காடை எனப் பல வெரைட்டி உணவுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக சிக்கன் உணவுகளை பலரும் விரும்பி சாப்பிடுவர். சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, சிக்கன் சூப், சிக்கன் 65 எனப் பல வகைகளிலும், சுவைகளிலும் சிக்கன் உணவுகளை செய்து சாப்பிடலாம். அந்த வரிசையில் ஹோட்டலில் மட்டுமே சாப்பிட்டுள்ள சிக்கன் ஆம்லெட் ரெசிபியை இனி வீட்டிலும் செய்து சாப்பிடலாம். ரெசிபி இங்கே…
தேவையான பொருட்கள்
முட்டை - 3
சிக்கன் கொத்துக் கறி மசாலா - 100 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். சிக்கன் கொத்துக் கறி மசாலாவை தனித் தனியாக பிய்த்து வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
அடுத்தாக, அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றவும். பாதி அளவு வெந்ததும் அதில் பிய்ந்து வைத்த சிக்கனை முட்டையின் மேல் தூவி மூடிவைத்து 1 நிமிடம் வேகவிடவும். இரு புறமும் திருப்பி போடவும். நன்கு வெந்தவுடன் சூடாக எடுத்து பரிமாறலாம். அவ்வளவு தான் சிக்கன் ஆம்லெட் தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/