பெரும்பாலானோருக்கு பாஸ்தா செய்ய தெரியாமல் இருப்பார்கள். ஆனால் இந்த முறையை பின்பற்றினால் போதும் பாஸ்தாவில் சிக்கன் சேர்த்து சிக்கன் பாஸ்தா சுவையாக செய்யலாம். இதை ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மாதிரியும் சாப்பிடலாம். சுவையான சிக்கன் பாஸ்தா செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பாஸ்தா - 1 1/2 கப்
சிக்கன் - 100 கிராம்
இத்தாலியன் சீசனிங் - 3 தேக்கரண்டி
பூண்டு தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பூண்டு
காய்ந்த மிளகாய் சிதறல்கள் - 2 தேக்கரண்டி
அரைத்த தக்காளி - 2 கப்
மொஸெரெல்லா சீஸ் - 150 கிராம்
கிரீம் - 1/2 கப்
எண்ணெய்
உப்பு
மிளகு
துளசி இலைகள்
செய்முறை
முதலில் பாஸ்தாவை வேகவைக்கவும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் பாஸ்தா, உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும். அடுத்து கடாயில் எண்ணெய், சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட சிக்கன், சிறிதளவு உப்பு, இத்தாலியன் சீசனிங், பூண்டு தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
சிக்கன் பாஸ்தா | Creamy Chicken Pasta Recipe in Tamil
சிக்கன் வெந்த பிறகு தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இத்தாலியன் சீசனிங், காய்ந்த மிளகாய் சிதறல்கள், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
இந்த கலவையில் அரைத்த தக்காளி, வேகவைத்த பாஸ்தா, மொஸெரெல்லா சீஸ், கிரீம், வேகவைத்த சிக்கன் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக துளசி இலை சேர்த்தால் போதும் சுவையான சிக்கன் பாஸ்தா ரெடியாகிவிடும்.