இரும்புச்சத்து நிறைந்த கொண்டைக்கடலை... இந்த மாதிரி ஒரு மார்னிங் டிபன் செய்யுங்கள்

இரும்புச்சத்து நிறைந்த கொண்டைக்கடலையில் சுவையான காலை உணவு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இரும்புச்சத்து நிறைந்த கொண்டைக்கடலையில் சுவையான காலை உணவு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
கொண்டக்கடலை அடை

சுவையான மற்றும் டிஃப்ரண்டான மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் எப்படி செய்வது என்று பார்ப்போம். இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து நிறைந்த கொண்டைக்கடலையில் அடை அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாதிரி எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 1 கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
தயிர் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 1/2 கப்
நெய்

செய்முறை:

Advertisment
Advertisements

கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊற வைக்கவும். ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, கொத்தமல்லி இலை மற்றும் தயிர் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். தோசைக்கல் சூடானதும், மாவை தோசைகளாக ஊற்றி, நெய் சேர்த்து இருபுறமும் வேக வைக்கவும். 

அவ்வளவுதான் கொண்டைக்கடலை அடை தயாராகிவிட்டது. இதோடு தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Best breakfast options for summer Fruits that are good to eat during breakfast

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: