கொண்டைக் கடலை சாலட் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஊறவைத்த கொண்டைக் கடலை – ½ கப்
வெங்காயத் தாள் (ஸ்பிரிங் ஆனியன்) – 2
சிகப்பு, மஞ்சள், பச்சை குடைமிளகாய் – சிறிதளவு
லெட்யூஸ் (சாலட் இலைகள்) – 4
ஆலிவ் ஆயில்- 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்,
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகு தூள் – 2 டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கொண்டைக் கடலையை லேசாக உப்புப் போட்டு வேக வைக்கவும். வெங்காயத்தாளின் அடியிலுள்ள வெள்ளை வெங்காயம், 3 நிற குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். லெட்யூஸ் இலைகளைக் நறுக்கி கொள்ளவும். வெங்காயத் தாளின் பச்சைப் பாகத்தை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து எலுமிச்சைச் சாறு, மிளகு தூள், உப்பு, நறுக்கிய பூண்டு, சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றையும் சேர்த்து மூடியைக் கொண்டு மூடி நன்றாகக் குலுக்கினால் சாலட் டிரெஸ்ஸிங் தயார்.
அடுத்து வேகவைத்த சுண்டல், நறுக்கிய குடைமிளகாய், வெள்ளை வெங்காயம், லெட்யூஸ் இலைகள், கொத்தமல்லித் தழை ஆகியவற்றை ஒரு பவுலில் போட்டு சாலட் டிரெஸ்ஸிங்கைச் சேர்த்து நன்றாக கலக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் பச்சைப் பாகத்தை மேலே தூவி அலங்கரிக்வும். அவ்வளவு தான் சுவையான கொண்டைக் கடலை சாலட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“