சுகர்  பேஷண்ட்ஸ் சப்போட்டா பழம் சாப்பிடலாமா ?  உங்க ரொம்ப நாள் கேள்விக்கு நிபுணர்கள் பதில்

இந்நிலையில் இதில் இயற்கையான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவு சற்று கூடுதலாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

இந்நிலையில் இதில் இயற்கையான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவு சற்று கூடுதலாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகர் பேஷண்ட்ஸ் சப்போட்டா பழம் சாப்பிடலாமா ?

சுகர் பேஷண்ட்ஸ் சப்போட்டா பழம் சாப்பிடலாமா ?

சப்போட்டா பழம் நிச்சயமாக சுவையான ஒன்று. இந்நிலையில் இதில் நாம் வியக்கும் வகையில் அதிக சத்துகள் உள்ளது. இதில் வைட்டமின் சி, நார் சத்து உள்ளது. இது ஜீரணத்தை அதிகப்படுத்தும். கூடுதலாக எலும்பை வலுப்பெறச் செய்யும். இதில் இருக்கும் நார்சத்து மற்றும் பொட்டாஷியம், இதய ஆரோக்கியத்தையும் ஆரோக்கியமான ரத்த அழுத்த அளவுகளை வைத்துகொள்ள உதவும்.

Advertisment

இந்நிலையில் 100 கிராம் சப்போட்டாவில் இருக்கும் சத்தை தெரிந்துகொள்வோம். கலோரிகள் : 88 , கார்போஹைட்ரேட்- 19.96 கிராம், நார்சத்து- 5.3 கிராம், புரத சத்து: 0.44 கிராம், கொழுப்பு சத்து: 1.1கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், நார்சத்து, பொட்டாஷியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளது.

இதில் இருக்கும் நார்சத்து ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதனால் மலசிக்கல் ஏற்படாது.

இந்நிலையில் இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சாதாரண நோய் தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றும். இதில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் இயற்கையாகவே இனிப்பு இருப்பதால், இது புத்துணர்வு வழங்கும்.

Advertisment
Advertisements

இதில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி நமது செல்களை பாதிப்பிலிருந்து பாதுகாப்பதால், புற்றுநோய் கூட வரமால் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதில் அதிக கொழுப்பு சத்து இல்லை. குடுதலாக இதில் இருக்கும் நார்சத்து கொலஸ்ராலை குறைக்க உதவும். இந்நிலையில் இதில் இயற்கையான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவு சற்று கூடுதலாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: