2 மாங்காய் போதும்… குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட் ரெடி; சீசன் இருக்கும்போதே செஞ்சு வச்சுக்கோங்க!

குழந்தைகளுக்கு பிடித்த மேங்கோ பார் எப்படி ஈஸியாக வீட்டிலேயே செய்வது என்று பார்ப்போம்.இந்த சம்மருக்கு பிள்ளைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள்.

குழந்தைகளுக்கு பிடித்த மேங்கோ பார் எப்படி ஈஸியாக வீட்டிலேயே செய்வது என்று பார்ப்போம்.இந்த சம்மருக்கு பிள்ளைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள்.

author-image
WebDesk
New Update
mango bar

கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். 

Advertisment

அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.

அப்படியாக 90ஸ் கிட்ஸ் பேவரட் மேங்கோ பார் எப்படி செய்வது என்று சூரியாஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

மாங்காய்
சர்க்கரை
உப்பு
மிளகாய்த்தூள்

செய்முறை

மாங்காயை தோல் நீக்கி, வேகவைத்து அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் இந்த கூழை போட்டு, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்ததும், சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும். 

இந்த கலவையை ஒரு தட்டில் மெல்லியதாக பரப்பி வெயிலில் அல்லது நிழலில் உலர வைக்கவும். நன்கு காய்ந்ததும், விரும்பிய வடிவத்தில் வெட்டினால் சுவையான மேங்கோ பார் தயாராகிவிடும். 

இந்த சம்மருக்கு நம் வீட்டு பிள்ளைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். வீட்டில் இருக்கு பொருட்களை வைத்தே இந்த சீசனில் கிடைக்கும் மாங்காய் வைத்து செய்து விடலாம்.

raw mango Healthy light weight snacks to eat in this season

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: