சம்மர் ஹாலிடேஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சி. இனி குழந்தைகளுக்கு பதட்டமே இல்லாமல் ஈஸியாக டிபன் செய்து கொடுக்கலாம். அப்படி ஒரு ஈஸியான டிபன் ரெசிபி அதுவும் இட்லியில் எப்படி செய்வது என்று மெட்ராஸ் சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
டேபிள் ஸ்பூன் எண்ணெய் கடுகு விதைகள் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை மஞ்சள் தூள் கரம் மசாலா கொத்தமல்லி தூள் மிளகாய் தூள் தக்காளி உப்பு கோழி கறி முட்டைகள் மிளகு கொத்தமல்லி தழை இட்லி மாவு
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின்னர் இதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வேகம் வரை வதக்க விடவும்.
உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள சிக்கனை எடுத்து அந்த மசாலாவில் சேர்த்து கலந்து விடவும். அடுத்ததாக இதில் இரண்டு முட்டை எடுத்து அதில் உடைத்து சேர்த்து கலந்து கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு இட்லி தட்டில் முதலில் இந்த மசாலாவை வைத்து மேலே இட்லி மாவு ஊற்றி வேகவிட்டு எடுக்கவும் மேலே மசாலாவும் உள்ள இட்லியும் என சுவையாக இருக்கும் இதை தோசைக்கும் ட்ரை பண்ணலாம்.