வீட்டிலேயே ஹெல்தியான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் அதுவும் பூரி மாதிரி சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்தியன் ரெஸிபீஸ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
கோதுமை அல்லது மைதா - 1 1/2 கப்
ரவை - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
எண்ணெய்
உப்பு
செய்முறை
ஒரு பவுலில் கோதுமை மாவு, ரவை நாட்டு சர்க்கரை, சிறிது உப்பு போட்டு கலந்து விடவும். பின்னர் இதில் சூடான தண்ணீர் சிறிது சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு அரை மணி நேரம் இதை ஊற வைக்கவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு சிறிய வடிவிலான தட்டு ஒன்றை எண்ணெயில் போட்டுக் கொள்ளவும்.
கோதுமை மாவு வைத்து புதுவித சுவையில் பஞ்சு போல ஸ்நாக்ஸ் | Pua Pitha Recipe in Tamil | Sweet Appam
அந்த தட்டை ஒரு கரண்டியை வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவை இதில் ஊற்றி எண்ணெயில் போட்டு மேலே எண்ணெயை ஊற்றி ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக விடவும்.
நல்ல சிவந்து வந்தவுடன் அதை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு முறையும் இதே மாதிரி செய்யலாம். பூரி மாதிரி உப்பி வரும்.