அடுப்பும் நெருப்பும் இல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஒரு ஸ்வீட் அதுவும் பிஸ்கட் வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்தியன் ரெஸிப்பீஸ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
சர்க்கரை பாதாம் முந்திரி பிஸ்கட் பால் பவுடர் பால் உணவு கலர் நெய் தேங்காய் பவுடர்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் அளவுக்கு சர்க்கரை சேர்த்து அதை அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் இருந்து சிறிது சர்க்கரையை தனியாக எடுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் உள்ள சர்க்கரையில் பாதம், முந்திரி இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஏதேனும் ஒரு பிஸ்கட்டை எடுத்து அதனை உடைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்ததை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் பால் பவுடர் சேர்த்து கலர் பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
இதில் காய்ச்சி ஆற வைத்த பால் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். மேலே சிறிது நெய் சேர்த்து செய்யவும். பின்னர் வேறு ஒரு மிக்சிங் பவுலில் தேங்காய் பவுடர், பால் பவுடர், சர்க்கரை பவுடர் மூன்றையும் சேர்த்து பிசைந்து அதிலும் காய்ச்சி ஆரம்பித்த பாலை போட்டு பிசையவும்.
அதேபோல சிறிது நெய் சேர்த்து பிசையவும். பின்னர் ஒரு பட்டர் பேப்பர் எடுத்து அதன் மேல் உருட்டி மாவை உருட்டவும். பின்னர் அந்த வெள்ளை கலர் மாவை ஆரஞ்சு கலர் மாவிற்குள் வைத்து பேக் செய்யவும். இது உருண்டை வடிவிலேயே இருக்க வேண்டும். பின்னர் இதனை வட்ட வட்டமாக நறுக்கி சாப்பிடலாம். உள்ளே வெள்ளை கலரில் மேலே ஆரஞ்சு நிறத்திலும் ஒரு ஸ்வீட் ரெடி ஆகிவிடும்.