சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
அப்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகவும் பிரபலமான மற்றும் எளிமையான காலை உணவு ரெசிபிதான் இந்த துஸ்கா. வெறும் மூன்று பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, சுவையான மற்றும் மொறுமொறுப்பான துஸ்காவை எப்படி செய்வது என்று திண்டுக்கல்டிவன்குசைன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் இதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
பச்சரிசி - 1 கப் கடலை பருப்பு - ½ கப் உளுத்தம் பருப்பு - ¼ கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
முதலில், பச்சரிசி, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவவும். கழுவிய பருப்பு மற்றும் அரிசியை போதுமான தண்ணீர் ஊற்றி குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பிறகு, மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக மென்மையாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மூடி வைத்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
புளித்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், ஒரு கரண்டி அல்லது சிறிய கிண்ணத்தை பயன்படுத்தி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும்.
பொரித்த துஸ்காவை எண்ணெயில் இருந்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும், இதனால் அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்படும். அவ்வளவுதான் சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஜார்க்கண்ட் ஸ்பெஷல் துஸ்கா ரெடி. இதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.