ஒரு பாக்கெட் பிரட் போதும்... நான்வெஜ் ஸ்டைல் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி ரெடி

சம்மர் ஸ்பெஷல் நான்வெஜ் ஸ்டைலில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். பிரட் மட்டும் போதும் ஈஸியான ஸ்நாக்ஸ் ரெடியாகிவிடும்.

சம்மர் ஸ்பெஷல் நான்வெஜ் ஸ்டைலில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். பிரட் மட்டும் போதும் ஈஸியான ஸ்நாக்ஸ் ரெடியாகிவிடும்.

author-image
WebDesk
New Update
bread chilli

சம்மர் ஸ்பெஷலாக ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி வெறும் பிரட் மட்டும் வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டில் பிரட் மட்டும் இருக்கா கவலை வேண்டாம் அந்த பிரட்டில் நான்வெஜ் ஸ்டைலில் சில்லி பிரட் செய்து பாருங்கள். பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சில்லி பிரட் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
 
தேவையான பொருட்கள் 

Advertisment

பிரட் துண்டுகள்  
எண்ணெய்  
பூண்டு  
இஞ்சி  
பச்சை மிளகாய்  
வெங்காயம்  
குடைமிளகாய் 
உப்பு  
மிளகு தூள்  
வினிகர்  
சோயா சாஸ்  
மிளகாய் விழுது  
தக்காளி கெட்சப்  
சோளமாவு  
வெங்காயத்தாள் வெங்காயம்  
வெங்காயத்தாள்
கொத்தமல்லி இலை 

செய்முறை:

பிரட்டின் ஓரங்களை வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பிரட்டை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும். சில்லி பேஸ்ட் செய்ய மிளகாயை தண்ணீரில் வேகவைத்து, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவும்.

Advertisment
Advertisements

அடுத்து ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.

அடுப்பை குறைந்த தீயில் வைத்து வினிகர், சோயா சாஸ், அரைத்த மிளகாய் விழுது, தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். பின்பு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

சோளமாவு, தண்ணீர் இரண்டையும் சேர்த்து கட்டியின்றி கரைத்து கடாயில் சேர்க்கவும். அடுத்து டோஸ்ட் செய்த பிரட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு உடனே சாப்பிட ஆரம்பிக்கலாம். 

Healthy light weight snacks to eat in this season bread

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: