Advertisment

சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்: சில்லி பிரெட் ரெசிபி இங்கே

சில்லி பிரெட் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Chilli bread recipe

Chilli bread recipe

காரசாரமான சுவையான சில்லி பிரெட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் - 5

எண்ணெய் - தேவையான அளவு

சில்லி பிரெட் செய்ய பூண்டு - 5 பல்

இஞ்சி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 1

குடைமிளகாய் - 1

வெங்காயத்தாள் வெங்காயம் - சிறிதளவு

கொத்தமல்லி இலை -சிறிதளவு

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

வினிகர் - 1 டீஸ்பூன்

சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன்

சோளமாவு - 1 1/2 டீஸ்பூன்

தண்ணீர் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, குடைமிளகாய், வெங்காயத்தாள்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சில்லி பேஸ்ட் செய்ய மிளகாயை சுடு தண்ணீரில் வேகவைத்து, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவும். பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

இப்போது தோசைக் கல் வைத்து சூடானதும் பிரெட்டை போட்டு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும். அடுத்து ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து வினிகர், சோயா சாஸ், அரைத்த மிளகாய் விழுது, தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். சோளமாவு, தண்ணீர் இரண்டையும் சேர்த்து கட்டியின்றி கரைத்து கடாய்யில் சேர்க்கவும். அடுத்து டோஸ்ட் செய்த பிரெட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு உடனே பரிமாறவும். அவ்வளவு தான் காரசாரமான சில்லி பிரெட் தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment