New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/10/zg38ya2SMZSjvHD9SxxY.jpg)
சாக்கோ பார்
சாக்கோ பார்
சுவையான சாக்கோபார் எல்லோருக்கும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈசியாக சாக்கோபார் ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டிலேயே செய்வதால் ஆரோக்கியமாகவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியும் செய்து கொடுக்கலாம் ஈசியாக சாக்கோபார் செய்வது பற்றி இந்தியன் ரெசிப்பிஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
பால்
கான்பிளவர் மாவு
சர்க்கரை
வெண்ணிலா எசன்ஸ்
மில்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்
செய்முறை
ஒரு பவுலில் இரண்டு கப் பால் ஒரு டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு அல்லது மைதா மாவு சேர்க்கவும். பிறகு கால் கப் சர்க்கரை, ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் அனைத்தையும் சேர்த்து விஸ்க் வைத்து கலந்து விடவும்.
பின்னர் இதை அடுப்பில் வைக்த்து மிதமான சூட்டில் கலந்து விடவும். ஐந்து நிமிடத்தில் இது கெட்டியாக ஆரம்பிக்கும்.
பின்னர் இதனை முழுமையாக ஆறவிட வேண்டும். பின்னர் ஒரு பவுலில் டார்க் சாக்லேட் மற்றும் மில்க் சாக்லேட் எடுத்து டபுள் பாய்லிங் முறையில் இதை கரைத்துக் கொள்ளவும்.
வெறும் வீட்டிலுள்ள பொருளை வைத்து குழந்தைகளுக்கு பிடித்த சாக்கோபார் ஈசியா செய்ங்க| Chocobar Ice
இப்போது ஒரு காபி கப் எடுத்து அதில் இந்த சாக்லேட் கலவையை பூசி ஆற வைக்கவும். அதேபோல தயார் செய்துள்ள அந்தப் பாலை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து இந்த டம்ளரில் ஊற்றி மேலே சில்வர் பாயில் சீட் வைத்து மூடி அதன் மேல் ஐஸ் குச்சியை சொருகிவிட்டு ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் ஐஸ்கிரீம் ரெடி ஆகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.