scorecardresearch

டேஸ்டி.. குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் ரெசிபி இதோ!

குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

டேஸ்டி.. குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் ரெசிபி இதோ!

குழந்தைகளுக்கு சாக்லேட் மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் விரும்பி சாப்பிடுவர். அதேபோல் தான் பிஸ்கட்டும் விரும்பி சாப்பிடுவர். சாக்லேட் கடைகளில் வாங்கி கொடுப்போம். ஆனால் அதை வீட்டிலேயே செய்தால் நமக்கு தேவையான அளவும், ஆரோக்கியமாகவும் செய்யலாம். அந்தவகையில் ஈஸியான சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் ரெசிபி செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மில்க் பிஸ்கட்ஸ் – 10
கோகோ பவுடர் – 3 ஸ்பூன் 
கன்டன்ஸ்டு மில்க் (condensed milk) – 1/4 கப் 
முந்திரி-10 கிராம் 
பிஸ்தா-10கிராம் 
பாதாம்-10கிராம் 
வால் நட் -10 கிராம் 
தேங்காய் துருவல் – 1/4 கப் 

செய்முறை

முதலில் மில்க் பிஸ்கட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். அதேபோல் பாதாம், பிஸ்தா, முந்திரி, வால் நட் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அடுத்து கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும். சாஃப்டாக பிசைந்து கொள்ள வேண்டும். 

இந்த கலவையை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரத்திற்கு பிறகு கலவையினை கொஞ்சம் கையில் எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி எடுக்கவும். உருண்டையின் மேல் தேங்காய் துருவல் சேர்க்கவும். அதன் பின் நட்ஸ்களுடன் சேர்த்து பிரட்டி எடுக்கவும். அவ்வளவு தான் ஈஸியான சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Chocolate biscuit balls recipe making in tamil

Best of Express