Advertisment

கொளுத்தும் வெயிலுக்கு குளு குளு சாக்லேட் குல்ஃபி: இப்படி செய்யுங்க

சாக்லேட் குல்ஃபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Chocolate kulfi

Food

சுவையான சாக்லேட் குல்ஃபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

பால் - 2 கப்

பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

சாக்லேட் - 1 கப் (துருவியது)

சாக்கோ சிப்ஸ் - விருப்பத்திற்கேற்ப

சர்க்கரை - 1/2 கப்

பிஸ்தா, பாதாம் - சிறிது (நறுக்கியது)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பால் அடிபிடிக்காதவாறு கிளறி விட வேண்டும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் துருவிய சாக்லேட்டை போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி விடவும். பின்பு சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும். இதையடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி சாக்கோ சிப்ஸ் தூவி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால் சுவையான சாக்லேட் குல்ஃபி ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment