சாக்லேட் புட்டிங் இவ்வளவு ஈஸியா?.. இப்பவே செஞ்சு பாருங்க!

வீட்டிலேயே சிம்பிள், ஈஸியாக சாக்லேட் புட்டிங் செய்து பாருங்க.

வீட்டிலேயே சிம்பிள், ஈஸியாக சாக்லேட் புட்டிங் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
சாக்லேட் புட்டிங் இவ்வளவு ஈஸியா?.. இப்பவே செஞ்சு பாருங்க!

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றாலே மிகவும் பிடிக்கும். அடம்பிடித்தாவது வாங்கி சாப்பிடுவார்கள். சாக்லேட் வகைகள் கொக்கோ பவுடர் கொண்டு செய்யப்படுகிறது. இந்த பொருள் இருந்தால் போதும் சாக்லேட் வகைகள் வீட்டிலேயே செய்யலாம். அந்தவகையில் இங்கு சாக்லேட் புட்டிங் செய்து குறித்துப் பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

பேக்கிங் கொக்கோ பவுடர் - 1/4 கப்
சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1 1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
துருவிய சாக்லேட் - தேவையான அளவு

செய்முறை

Advertisment
Advertisements

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும். இப்போது இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கலக்கவும்.

கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கிளறவும். பின்னர் அதை வேறு பாத்திரம் அல்லது கப்பில் மாற்றி ஃபிரிட்ஜ்ஜில் வைக்கவும். பின்னர் துருவிய சாக்லேட். ஏதாவது ஒரு சாக்லேட்டை துருவி இந்த புட்டிங் மேலே தூவி பரிமாறவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: