நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். அந்த வகையில் வீட்டிலேயே சாக்லேட் புட்டிங் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்
சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1½ கப்
வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்
துருவிய சாக்லேட் - தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின்பு அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும். இப்போது இந்த கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும். கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும். பின்னர் அதை கப்களில் ஊற்றி ப்ரிஜில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து எடுத்து அதன் மேலே துருவிய சாக்லேட் தூவி சாப்பிடலாம். அவ்வளவு தான் சூப்பரான சாக்லேட் புட்டிங் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“