சாண்ட்விச் பலருக்கும் பிடிக்கும். பல வகை சாண்ட்விச் ரெசிபி உள்ளது. கடைகளில் மட்டும் தான் சாண்ட்விச் சாப்பிட முடியும் என்று இல்லை, வீட்டில் கூட நாமே செய்து சாப்பிடலாம். அதுவும் சாக்லேட் சாண்ட்விச் என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும். சாக்லேட் சாண்ட்விச் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பிரெட் - 4 துண்டுகள்
டார்க் சாக்லேட் துண்டுகள் - 4
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும். பின் பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துண்டுகளை வைத்து, மற்றொரு பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும். இதேப் போன்று மற்ற இரண்டு பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பு சூடானதும், மிதமான தீயில் பிரெட் துண்டுகளை வைத்து சிறிது வெண்ணெய் ஊற்றவும். பின் திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்ய வேண்டும். சூட்டில் சாக்லேட் உருகி பிரெட்டில் பரவி வரவும். அப்போது அடுப்பில் இருந்து எடுக்கவும். இதேப் போல் மற்றொரு சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்து மேல் வைத்து சாப்பிடவும். அவ்வளவு தான், டேஸ்டியான சாக்லேட் சாண்ட்விச் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/