கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அப்படி குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் ஃப்ளேவர் டிஷ் மோக்கா சாக்லேட் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
காபி தூள் - 2 தேக்கரண்டி சூடான பால் - 2 மேசைக்கரண்டி காய்ச்சிய பால் - 1 கப் குக்கிங் சாக்லேட் - 4 துண்டுகள் ஐஸ் கட்டிகள் முழு கொழுப்புள்ள பால் - 500 மி.லி சர்க்கரை - 2 தேக்கரண்டி வெண்ணிலா ஐஸ்கிரீம் காபி சாக்லேட் பால் சாக்லேட் சிரப் சாக்லேட் ஷேவிங்ஸ்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் காபி தூள் மற்றும் சூடான பால் சேர்த்து கலந்து தனியாக வைக்கவும். சாக்லேட் பாலுக்கு, காய்ச்சிய பால் மற்றும் குக்கிங் சாக்லேட்டை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
குறைந்த தீயில் சாக்லேட்டை உருக்கி சாக்லேட் பாலை எடுத்து தனியாக வைக்கவும். ஒரு மிக்சர் ஜாரில் ஐஸ் கட்டிகள், காய்ச்சி ஆறிய முழு கொழுப்புள்ள பால், சர்க்கரை, காபி கலவை, சாக்லேட் பால் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் எடுத்து அனைத்தையும் நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
அசெம்பிள் செய்ய, உயரமான கண்ணாடியில் ஐஸ் கட்டிகளை வைக்கவும். கண்ணாடியின் உட்புறத்தை சாக்லேட் சிரப் கொண்டு அலங்கரிக்கவும். மில்க் ஷேக்கை கிளாஸில் ஊற்றி மேலே சாக்லேட் ஷேவிங்ஸால் அலங்கரிக்கவும். அவ்வளவு தான் சுவையான மோக்கா சாக்லேட் ஷேக் தயாராக உள்ளது.