கொண்டைக்கடலை மற்றும் ராஜ்மாவில் அதிக புரத சத்து உள்ளது. இந்நிலையில் இதை நாம் வேக வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரத சத்து கிடைக்கும். நார்சத்து, வைட்டமின் பி9, போலிக் ஆசிட், கால்சியம் உள்ளது. கொண்டைக்கடலை மற்றும் ராஜ்மாவில் காம்பிளக்ஸ் கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 29 தான். இதனால் நமது கிளைசிமிக் லோட் அதிகரிக்காது.
ராஜ்மா, கொண்டைக்கடலை ஜீரணிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். கார்போஹைட்ரேட் சர்க்கரை மூலக்கூறுகளாக மாறும். நார்சத்து ஜீரணமாக அதிக தண்ணீரை எடுத்துக்கொள்ளும். அப்போது அதிக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் வாய்வுத் தொல்லை அதிகரிக்கலாம்.
கொண்டக்கடலை மற்றும் ராஜ்மாவில் ஸ்டசையோஸ் மற்றும் ராவ்ஃபினோஸ் என்ற இரண்டு ஸ்டார்ச்கள் உள்ளது. இந்த ஸ்டார்ச்கள் நமது குடலில் இருந்து வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். நமது வயிற்றில் ஓரங்களில் இருக்கும் பேக்டீரியா இந்த ஸ்டார்ச்களை ஹைட்ரோஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆக மாற்றுவதால் வயிறு உப்புகிறது.
இதிலிருந்து எப்படி தப்பிக்க முடியும் என்பதை தெரிந்துகொள்வோம். கொண்டைக்கடலை மற்றும் ராஜ்மாவை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதை சமைக்கும்போது காயம், ஓமம், பெருஞ்சீரகத்தை பயன்படுத்தினால் வாய்வுத் தொல்லை ஏற்படாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“