உடலில் உள்ள கொழுப்ப அளவை குறைக்க 25 விஷயங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஐந்து விஷயத்தை குறைக்க வேண்டும் 2 விஷயத்தை எரிக்க வேண்டும் என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
அதாவது உடலில் கொழுப்பு படிவது இதயநோய், மாரடைப்பு, உடல்பருமன் போன்ற ஏராளமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உடலில் கொழுப்பு சேர்வதை தவிர்க்க வேண்டும். அது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.
அவ்வாறு முதலி சேர்த்து கொள்ள வேண்டிய 25 விஷயங்களை பற்றி பார்ப்போம்
- பழம் - ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா, வாழை, பப்பாளி, மாதுளை, அன்னாசி, தர்பூசணி, பேரிக்காய்
- காய்கறிகள் - கத்திரிக்காய், வெங்காயம், சக்கரவல்லி கிழங்கு, பூண்டு
- பீன்ஸ் வகைகள் - ராஜ்மா பீன்ஸ்
- பயிறு வகைகள்
- சுண்டல் வகைகள் - வெள்ளை சுண்டல், கருப்பு சுண்டல்
- பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு
- சியா விதைகள்
- கீரை வகைகள் - புரோக்கோலி கீரை மற்றும் மற்ற அனைத்து வகை கீரைகள்
- தயிர்
ஆகிய 25 விஷயங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக குறைக்க வேண்டிய 5 விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
25-5-2 formula to reduce cholesterol #doctorkarthikeyan #tips #cure
1. நாம் சாப்பிடும் உணவுகள் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அதில் நிறைய கொழுப்புகள் உடலில் சேர்கிறது.
2. எண்ணெய் உடைய அளவுகளை குறைக்க வேண்டும்.
3. சர்க்கரை அளவை குறைக்க வேண்டும்.
4. உப்பு அளவை குறைக்க வேண்டும்.
5. மது, புகைப்பிடித்தல் கூடாது
அடுத்ததாக எரிக்க வேண்டிய 2 விஷயங்களை பற்றி பார்ப்போம்.
- தினமும் 45 நிமிடம் நடக்க வேண்டும்.
- தினமும் ஒரு கிலோ வெயிட் தூக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.