கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரொம்ப சிம்பிளா மொறுமொறுவென கல்கல் எப்படி செய்வது என்று இங்கே தருகிறோம். கல்கல் ரொம்ப எளிதாக செய்யலாம். முட்டை வேண்டாம், பட்டர் வேண்டாம், இந்த கல்கல் செய்ய வெறும் 4 பொருட்கள் மட்டும்தான் தேவை. இப்போது கல்கல் செய்வது எப்படி என்றே இங்கே பார்க்கலாம்.
கல்கல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கால் கப் அளவு வறுக்காத ரவை போடுங்கள். அதில் கால் கப் அளவு நெய் சேர்த்துக்கொள்ளுங்கள். கரண்டியில் நன்றாகக் கலந்துவிட்ட பிறகு, அப்படியே ஒரு மூடிபோட்டு 10 நிமிடம் மூடி வையுங்கள். இப்போது இதனுடன் 1 கப் அள்வு மைதா மாவு சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். அரை கப் அளவு சர்க்கரையை மிக்ஸில் அரைத்து சர்க்கரைத்தூளை மாவில் சேர்த்து நன்றாகக் கலந்துவிடுங்கள். இதனுடன் அரை கப் அளவு பால் சேர்த்து சப்பாந்தி மாவு பிசைவதைப் போல ஒரு 15 நிமிடம் நன்றாகப் பிசையுங்கள். இப்போது உங்களுக்கு விருப்பமான வடிவில், டிசைனில் சிறிய அளவில் செய்து வைத்துக்கொள்ளூங்கள்.
ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய வையுங்கள். எண்ணெய் நன்றாகக் காய்ந்த பிறகு, ஸ்டவ்வில் தீயை மிதமாக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது மாவில் செய்து வைத்திருக்கும் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மாவை எண்ணெயில்போட்டு பொறித்தால் சுவையான மொறுமொறுப்பான சுவையான கல்கல் தயார். இதை நீங்கள் ஒரு கண்டெய்னரில் போட்டு வைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“