கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் கேக் தான் நியாபத்திற்கு வரும். கேக் இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிறைவு பெறாது. அப்படிப்பட்ட கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி என்று தேட ஆரம்பித்து இருப்பீர்கள். டேஸ்டியான சுவையான கிறிஸ்துமஸ் பிளம் கேக் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை
உலர் பழங்கள் (பாதாம், திராட்சை, முந்திரி, துத்தி பழம், செர்ரி, வால்நட்)
வெண்ணெய்
வெண்ணிலா எசென்ஸ்
மைதா
முட்டை
ஏலக்காய்
கிராம்பு
இலவங்கப்பட்டை தூள்
பேக்கிங் பவுடர்
பேக்கிங் சோடா
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை எடுத்து, அதை முழுமையாக கேரமலாக மாற்றவும். அடுப்பை அணைத்துவிட்டு வெந்நீர் சேர்த்து கலந்து மீண்டும் அடுப்பை பற்ற வைக்கவும். இந்த கேரமல் செய்யப்பட்ட சர்க்கரை பாகை கிண்ணத்தில் சேர்க்கவும். பின்னர் வெண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்
மைதா, உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒரு சல்லடையில் போட்டு, அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சலிக்கவும். இந்த உலர் பொருட்களை ஈரமான பொருட்களுடன் சேர்க்கவும், அவை அனைத்தையும் நன்கு கலக்கவும்.
கலவையில் நறுக்கிய முந்திரியைச் சேர்த்து மீண்டும் அனைத்தையும் கலக்கவும். கேக் டின்னில் பட்டர் பேப்பர் வைக்கவும். தயாரிக்கப்பட்ட கேக் மாவை மெதுவாக கேக் டின்னில் மாற்றி மிதமான சூட்டில் வைக்கவும்.
பின்னர் அப்ப்டியே ஒரு மணி நேரம் பேக்கிங் செய்யவும். பிறகு கேக்கை டின்னில் இருந்து அகற்றி பட்டர் பேப்பரை மெதுவாக அகற்றி வெட்டி சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“