சித்த மருத்துவர் சிவராமன் இலவங்க பட்டையின் நன்மைகள் குறித்து யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். இலவங்கம் வெறும் வாசனை பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணம் கொண்டது எனவும் கூறியுள்ளார்.
Advertisment
அவர் கூறுகையில், "பிரியாணி, காய்கறி உணவுகள், புலாவ் உணவுகள் என எதுவாக இருந்தாலும் இலவங்க பட்டை முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. இது மிகுந்த மணம் தருகிறது. சுவையை கூட்டுகிறது. ஆனால் இது வெறும் வாசனைக்கு மட்டுமல்ல சிறந்த மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
இது ஜீரணம் செரிமானத்திற்கு உதவுகிறது. இறைச்சி எடுத்துக் கொள்ளும் போதும் அதில் இது சேர்ப்பதற்கு இதுவே முக்கிய காரணம். இது மட்டுமல்ல மணம் ஊட்டிகள் எல்லாமும் இதற்கு உதவுகிறது. இவைகள் வயிற்றில் வாயு தக்க விடாமல் விரைவாக செரிமானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல இன்றைக்கு மருத்துவ உலகம் அச்சப்படக்கூடிய நோய் சர்க்கரை நோய். உலகத்தில் இந்தியாவில் தான் அதிகப்படியான சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். 30-32 வயது உள்ளவர்களும் சர்க்கரை நோய் பாதிக்கப்படுகின்றனர்.
ஆரம்ப கட்ட நீரழிவு நோய்க்கு பயன்படுத்தக் கூடிய மிக முக்கியமான மூலிகை இலவங்க பட்டை. இந்த இலவங்க பட்டை அன்றாட உணவு, தேநீரில் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என ஆராய்ச்சியில் தெரி ய வந்துள்ளது. குறிப்பாக 12 ஆண்டுகள் இதுகுறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இலவங்க பட்டையை தினமும் எடுத்துக் கொள்பவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்க சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவந்ததாக அமெரிக்க பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இலவங்க பட்டையை சாதாரணமாக, தினமும் நாம் சாப்பிடக் கூடிய உணவுகளில் எடுத்துக் கொண்டாலே போதுமானதாக இருக்கும். தேநீரில் இதை சேர்த்து குடிக்கலாம். ஏற்கனவே குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் உள்ளது, பெற்றோருக்கு உள்ளது நமக்கு வராமல் தடுக்க வேண்டும் என்றால் இலவங்க பட்டை தினமும் சாப்பிடலாம் " என அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news