நமது வீட்டில் பயன்படுத்தும் கிராம்பில் நாம் நினைப்பதைவிட அதிக நன்மைகள் இருக்கிறது. நாம் இதை வெறும் மனத்திற்காக மட்டுமே சமையலில் பயன்படுத்துவோம் ஆனால் நாம் இதை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
கிராம்பில் புரத சத்து, கொழுப்பு சத்து, இரும்பு சத்து, மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் 100 கிராம் கிராமில் 268 கலோரிகள் மட்டுமே உள்ளது.
இதில் இருக்கும் வைட்டமின் சி , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நாம் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். வாய் வழியாக கிருமிகள் உள்ளே செல்லாமல் இருக்கவும் உதவுகிறது. வலுவான ஈர்களை பெற வேண்டும் என்றால் கிராம்பு உங்களுக்கு நிச்சயம் உதவும். வாயில் தங்கிவிடும் பேக்டிரியாவால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.
இதில் இருக்கும் முக்கிய பண்புகள் சர்க்கரை நோய்யை குணப்படுத்துகிறது. ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. பீட்டா செல்களை சீராக செயல்பட வைக்கிறது.

இது செரிமான மண்டத்தில் ஏற்படும் சிக்கலை தீர்க்கிறது. குறிப்பாக அதிகபடியான அமிலம் வயிற்றில் சுரப்பது, அஜீரணம், குமட்டல் ஆகியவற்றை கட்டுபடுத்த உதவுகிறது.
இதில் உள்ள ஒருவகை சத்து நோய் கட்டிகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் இது புற்றுநோய்யை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆஸ்துமா, சளி, இரும்பல் ஆகியவற்றை ஏற்படாமல் தடுக்கிறது.
இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீஷியம் பண்புகள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. மேலும் எலும்பு முறிவு ஏற்படாமல் தடுக்கிறது.