பொதுவாகவே, காய்கறிகளில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கும். குறிப்பாக, கொத்தவரங்காயில் நரம்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆற்றல், ஊட்டச்சத்துகள், செரிமான ஆரோக்கியம், எடை மேலாண்மை போன்றவை இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் கொத்தவரங்காய் கொண்டு சுவையான கூட்டு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொத்தவரங்காய்,
மஞ்சள் தூள்,
உப்பு,
வேர்க்கடலை,
மல்லி விதைகள்,
சீரகம்,
பூண்டு,
தேங்காய்,
காய்ந்த மிளகாய்,
எண்ணெய்,
கடுகு,
உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை,
வெங்காயம்.
செய்முறை:
கொத்தவரங்காயை நன்றாக கழுவி விட்டு, சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை குக்கரில் போட்டு அத்துடன் சிறிது மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
இதனிடையே, அடுப்பில் கடாய் வைத்து அதில் வேர்க்கடலை, மல்லி விதைகள், சீரகம், பூண்டு, தேங்காய், காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து பொந்நிறமாக வறுக்க வேண்டும். இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கலாம்.
இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். இனி, வேக வைத்த கொத்தவரங்காய், அரைத்த மசாலா சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கூட்டு தயாராகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.