பூ மாதிரி துருவிய தேங்காய்... 2 ஸ்பூன் நெய் சேர்த்து பர்பி; இப்படி செஞ்சா செம்ம டேஸ்ட்!
வீட்டிலேயே மிகவும் சாஃப்டாக டேஸ்டியாக தேங்காய் மற்றும் நெய் வைத்து சுவையான பர்பி எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த மாதிரி பர்பிகள் டீ கடைகளில் கிடைக்கும்.
வீட்டிலேயே மிகவும் சாஃப்டாக டேஸ்டியாக தேங்காய் மற்றும் நெய் வைத்து சுவையான பர்பி எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த மாதிரி பர்பிகள் டீ கடைகளில் கிடைக்கும்.
இனிப்புக் கடைகளில் மட்டுமே கிடைக்கும் என்று நாம் நினைக்கும் தேங்காய் பர்பியை வீட்டிலேயே மிக எளிதாகவும், சரியான அளவுகளுடனும் செய்யலாம். இதற்குத் தேவையான பொருட்கள் உங்கள் சமையலறையிலேயே இருக்கும். டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது போல தேங்காய் பர்பி தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல்: 3 கப் நெய்: 2 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை: 2 கப் (சுமார் 350 கிராம்) தண்ணீர்: அரை கப் ஏலக்காய்த்தூள்: கால் டீஸ்பூன்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்க்கவும். நெய் உருகியதும், பூ போல துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து, மிதமான அல்லது அதிக தீயில் சுமார் 3 நிமிடங்கள் வறுக்கவும். தேங்காய் துருவல் பொன்னிறமாக வறுபட்டதும், அதை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துவிடுங்கள்.
அதே கடாயைத் துடைத்துவிட்டு, அதில் நாட்டு சர்க்கரை (அல்லது வெல்லம்) மற்றும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்து கொதித்து வரும் வரை நன்கு கிளறவும். பாகு லேசாக பிசுபிசுப்பு பதம் வந்ததும் (கம்பிப் பதம் தேவையில்லை), அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும். (வெல்லம் பயன்படுத்துவதாக இருந்தால், கரைத்த பின் வடிகட்டி உபயோகிக்கவும்).
சர்க்கரைப் பாகில், நீங்கள் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் துருவலை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து விடுங்கள். தேங்காய் துருவலும் பாகும் ஒன்றுசேர்ந்து, பாகு வற்றும் வரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருங்கள். சுமார் 8 நிமிடங்கள் கழித்து, கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும். இந்த சமயத்தில் தேங்காய், சர்க்கரை, நெய், மற்றும் ஏலக்காயின் வாசம் சமையலறையை நிரப்பும்.
சுமார் 10 நிமிடங்களில், கலவை கெட்டியாகி, கடாயில் ஒட்டாமல் வரும். இதுதான் சரியான பதம். இந்த நிலையில் அடுப்பை அணைத்துவிடுங்கள். ஒரு ட்ரேயில் பட்டர் ஷீட்டை விரித்து, அதன் மேல் பர்பி கலவையை கொட்டி, ஒரு ஸ்பேட்டூலா அல்லது கரண்டியின் பின் பகுதியைக் கொண்டு நன்கு அழுத்தி சமப்படுத்தவும்.
பர்பி கலவை ஒரு மணி நேரம் நன்கு ஆறியதும், பட்டர் ஷீட்டுடன் ட்ரேயிலிருந்து வெளியே எடுத்து, உங்களுக்குத் தேவையான வடிவத்தில் துண்டுகளாக வெட்டவும். இப்போது, கடைகளில் வாங்கும் அதே சுவையுடனும், தரத்துடனும் உங்கள் தேங்காய் பர்பி தயாராக உள்ளது. இனிப்பு சாப்பிட நினைக்கும்போதெல்லாம், இந்த எளிய செய்முறையைப் பயன்படுத்தி உடனடி இனிப்பை சட்டுன்னு செய்து அசத்தலாம்.