Advertisment

தயிர் சாதத்துக்கு சைட் டிஷ் ரெடி: தேங்காயில் குழம்பு இப்படி செய்யுங்க!

இளந்தேங்காய் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vendhaya Kulambu recipe in tamil: Fenugreek Seed Curry making tamil, Lifestyle Tamil News, Healthy food Tamil News, Lifestyle recent Tamil News, Lifestyle latest Tamil News, Lifestyle News, Lifestyle Tips in Tamil, Health Tips, Beauty Tamil News, Lifestyle, Latest Fashion Updates Online, Tamil News Live, simple health tips tamil, வாழ்க்கை டிப்ஸ், healthy food tips in tamil, ஆரோக்கிய டிப்ஸ், siddha health tips in tamil, health tips in tamil pdf free download, உடல் ஆரோக்கியம் குறிப்புகள், Food recipes, healthy food Tamil News, food tips in tamil, recipes in tamil, variety food recipe in tamil, tamil food recipe, tamil healthy food tips, Best foods in tamil, tamil super foods, tamil healthy super food, food news, recipes news, tamil recipes in tamil, வெந்தய குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி, VENDHAYA KULAMBU, Vendhaya kulambu (Fenugreek gravy) Recipe, வெந்தய குழம்பு செய்வது எப்படி, fenugreek curry recipe, vendhaya kuzhambu recipe, fenugreek curry vegetarian, vendhayam recipes, how much f

Food recipe

ருசியான இளந்தேங்காய் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 1 கப்

இளந்தேங்காய் – 1 மூடி

தக்காளி – 4

புளி – சிறிதளவு

மிளகாய்தூள் – இரண்டரை டீஸ்பூன்

தனியா தூள்- ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு- அரை டீஸ்பூன்

வெந்தயம் – அரை டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெங்காயத்தைத் தோலுரித்து, இரண்டாக நறுக்குங்கள். தேங்காயை பல்லுப்பல்லாக நறுக்கிக் கொள்ளுங்கள். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளுங்கள். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து பொன்னிறமானதும் வெங்காயத்தைப் போட்டு, அது நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியையும் போட்டு, சிறிது உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்குங்கள்.

அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றுங்கள். அதில் மிளகாய்தூள், தனியாதூள், நறுக்கிய தேங்காய், தேவையான உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி கெட்டியான பிறகு இறக்குங்கள். அவ்வளவு தான், இளந்தேங்காய் குழம்பு ரெடி. தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment