பலவகையான தோசை சாப்பிட்டு இருப்போம், ஆனால் இந்த மாதிரியான தோசை எந்த கடைகளிலும் கூட சாப்பிட்டு இருக்க மாட்டோம். அப்படிபட்ட சுவையான பஞ்சு போன்று மிருதுவான தேங்காய் தோசையை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி
சாப்பாடு
தேங்காய் துருவல்
இளநீர்
ஐஸ்கட்டிகள்
இரண்டு காப் பச்சரிசி எடுத்து நன்றாக கழுவி ஒரு ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். குறைந்தது 5 மணி நேரமாக இதை ஊறவைத்து எடுத்தால் தான் தோசை மெதுவாக பஞ்சு போல் வரும்.
ஊற வைத்த அரிசியின் தண்ணியை வடிகட்டி ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசியை போட்டு அதனுடன் ஒரு கப் சோறு, ஒரு கப் தேங்காய் துருவல், ஒரு கப் தண்ணீர் அல்லது இளநீர் சேர்த்து மிக்ஸி சூடாகாமல் இருப்பதற்கு மூன்று ஐஸ் கட்டிகள் போட்டு அரைக்க வேண்டும்.
இளநீர் ஊற்றி மாவு அரைத்தால் தோசை பஞ்சு போல் நன்றாக வரும். எல்லாத்தையும் சேர்த்து நன்றாக ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கைகளால் மாவை நன்றாக கரைக்க வேண்டும்.
மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்தது 12 மணி நேரம் புளிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மாவு நன்றாக புளித்து வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். உப்பு சேர்த்து விட்டு மாவை நன்றாக கரைத்து பார்த்தால் தோசை சுடுவதற்கு ஏற்ற சரியான பதத்தில் கரைக்க வேண்டும்.
எப்போதும் போல தோசை கல்லில் தோசை ஊற்றி கொள்ள வேண்டும். இந்த தோசையை திருப்பிப்போட்டு சுட தேவை இல்லை. அதனால் தோசை ஊற்றி விட்டு பாத்திரத்தின் மேல் மூடி போட்டு வைத்து விடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“