சர்க்கரை நோய் வந்துவிட்டால் எதை சாப்பிட வேண்டும் என்ற கேள்வியும் நம் மனதில் அடிக்கடி எழும். பொதுவாக இளநீர் குடிப்பது உடலுக்கு நன்மை தருகிறது என்று கூறப்பட்டாலும் . சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா? என்ற கேள்வி எழுகிறது.
இந்நிலையில் 100 கிராம் இளநீரில் : 354 கலோரிகள், புரத சத்து 3.33 கிராம் , கார்போஹைட்ரேட் 15.2 கிராம், சர்க்கரை 6.23 கிராம், கொழுப்பு சத்து 33. 5 கிராம், நார்சத்து 9 கிராம் உள்ளது. சோடியம் 20 மில்லி கிராம், பொட்டாஷியம் 356 கிராம் இருக்கிறது.

தேங்காயில் அதிக நார்சத்து இருக்கிறது. இளநீரிக்குள்ளே இருக்கும் வெள்ளை சதையில் அதிக நார்சத்து இருக்கிறது. மேலும் இதில் குறைந்த கார்போஹைட்ரேட் இருக்கிறது. குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்சத்து எப்போதும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதுதான்.
மேலும் இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் இருக்கிறது. இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் வெறும் 51-தான்.
தேங்காய் நீரில் எக்ட்ரோலைட்ஸ் (electrolytes) இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் நன்மை அளிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் எக்ட்ரோலைட்ஸ் அளவு குறையும்.
இளநீரில் இருக்கும் எலக்ட்ரோலைட் சர்க்கரை நோயாளிகள், தண்ணீர் வரட்சியால் பாதிக்கப்படாமல் இருக்க உதவுகிறது. இதில் இருக்கும் பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தை சீராக பார்த்துக்கொள்ள உதவுகிறது.மேலும் சிறுநீரகம் பாதிக்கப்படாமல் தடுக்கிறது.
மேலும் இளநீரில் குறைந்த சர்க்கரைதான் இருக்கிறது. இதனால் சர்க்காரை நோயாளிகள் நம்பி குடிக்கலாம். மேலும் இதில் அதிக ஆண்டி ஆக்ஸ்டண்ட் இருக்கிறது. இதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும்.