பாரம்பரிய இயற்கை உணவுகளின் நன்மைகள் குறித்து பேசும் மருத்துவர் சிவராமன், தேங்காயின் நன்மைகள் பற்றி கூறியுள்ளார். தேங்காயும் தாய்ப்பாலும் ஒண்ணு என்று கூறும் மருத்துவர் சிவராமன், இதன் முக்கியமான சில பயன்கள் பற்றியும் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேங்காயில் சாச்சுரேட் கொழுப்பு இருக்கிறது. அது உடலுக்கு கேடு, மாரடைப்பு வரும் என்று ஒரு தவறான எண்ணம் உருவாகி இருக்கிறது என்றெல்லாம் தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் தேங்காயைத் தவிர்த்து வருகிறார்கள். ஆனால், தேங்காய் அப்படி தீமையானது இல்லை. அமெரிக்க நிறுவனங்கள், கொண்டு வந்த சோயா எண்ணெய், பாமாயில் போன்றவற்றை முன்னிறுத்த தேங்காயில் கொழுப்பு அதிகம் என்று ஆய்வுகள் என்ற பெயரில் தேங்காயைப் புறக்கணிக்கச் செய்யும் வணிகச் சதிகள் நடந்ததாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
தேங்காயில் லாரிக் ஆசிட் என்ற அமிலம் உள்ளது. இது கேடானது என்று சிலர் கூறுகிறார்கள். அதே நேரத்தில், இந்த தேங்காயில்தான், மோனோ லாரிக் அமிலம் உள்ளது. இந்த மோனோ லாரிக் அமிலம் தேங்காயைத் தவிர வேறு எதில் இருக்கிறது என்றால், தாய்ப்பாலில் உள்ளது. அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது தான் தேங்காய்.
கேரளா, இலங்கை, தைவான், மலேசியா போன்ற நாடுகளிலும், தமிழத்தில் நாகர்கோயில் போன்ற பகுதிகளிலும் தேங்காயை முக்கிய உணவாகப் பயன்படுத்துகின்றனர். தேங்காய் மக்களின் பல நூறு ஆண்டுகள் உணவுப் பொருளாக இருந்து வந்துள்ளது. திருநெல்வேலி பகுதிகளில், ஆப்பம் தேங்காய் பால், தேங்காய் சொதி ஆகியவை சிறப்பான உணவுகளாக இருகின்றன.
தேங்காய் தரும் பயன்கள்🌴 Dr. Sivaraman speech in Tamil | Coconut benefits in Tamil | Tamil speech box
தேங்காய்ப் பால் குடல் புண்ணை ஆற்றக்கூடிய ஆற்றல் கொண்டது. மணத்தக்காளி கீரைகுப் பிறகு, வயிற்றுப் புண்ணை ஆற்றக்கூடியது தேங்காய்ப் பால்தான். மெலிதாக இருக்கும் குழந்தைகளுக்கு தேங்காய்ப் பால் ஆப்பம் கொடுத்தால் விரைவில் எடை கூடும். அதே போல, உணவு சாப்பிடாமல் மெலிந்து காணப்படும் குழந்தைகளுக்கு பொட்டுக் கடலை, தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் சேர்த்து கொடுத்தால், விரைவில் எடைகூடும்.
தேங்காயில் உள்ள ட்ரைகிளிசரைடு என்ற பொருள்தான் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் எடை அதிகரிக்க, குழந்தை மருத்துவர்கள் குழந்தைகள் எடை கூட அளிக்கப்படும் மருந்தாக இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.