ஐஸ்கிரீம் என்றாலே பிடிக்கும். பல வெரைட்டி ஐஸ்கிரீம் உள்ளன. அந்த வகையில் வீட்டிலேயே சுவையான புது வகையான தேங்காய் பால் ஐஸ்கிரீம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். ட்ரை செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
தேங்காய் பால் - 4 கப்
தேங்காய் பதம் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
சோள மாவு - 4 ஸ்பூன்
பிரெஷ் கிரீம் - 1 கப்
செய்முறை
தேங்காய் ஸ்கிரீம் செய்ய முதலில், ஒரு தேங்காயை உரித்து, உடைத்து தேங்காய் பத்தையை மட்டும் தனியாக எடுத்து, அதை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில், நறுக்கிய தேங்காய், சோள மாவு மற்றும் 1/2 கப் குளிர்ந்த தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து மிதமான தீயில் வைத்து, அதில் மீதமுள்ள பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை நன்றாக கிளறவும். பின்னர் இதை 4-5 நிமிடங்கள் கிளறி கொதிக்க வைக்கவும்.
இப்போது, தேங்காய் பால் மற்றும் சோள மாவு கலவையை பாலுடன் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும். பால் நன்றாக வற்றியதும், அடுப்பை அனைத்து கலவையை குளிர வைக்கவும்.
கலவை நன்றாக ஆறியதும் அதில் பிரெஷ் கிரீம் சேர்க்கவும். ஒரு அலுமினிய பாத்திரத்தை எடுத்து அதில் கலவையை
ஊற்றவும். இப்போது, இந்த பாத்திரத்தை அலுமினிய ஃபாயில் அல்லது க்ளிங் ஷீட் மூலம் மூடி, ஃப்ரீசரில் வைக்கவும்.
இந்த கலவையை சுமார் 6-7 மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். இந்த கலவையை எடுத்து பிளெண்டர் ஜாடிக்குள் மாற்றி, மென்மையான வடிவம் கிடைக்கும் வரை நன்றாக பிலேண்ட் செய்யவும். பின்னர் இந்த கலவையை மீண்டும் அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் சில்லுகளை சேர்த்து அலுமினிய ஃபாயில் ஷீட்டால் மூடி, கலவை செட் ஆகும் வரை உறைய வைக்கவும். 5 முதல் 6 மணி நேரம் ப்ரீஜில் வைக்க வேண்டும். அதன் பின் எடுத்தால் சுவையான தேங்காய் ஐஸ்கிரீம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“