தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு போல் இனிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சிலர் வீடுகளில் இனிப்பு தயாரிப்பர், சிலர் கடைகளில் வாங்குவர். இனிப்புகளை நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்வர். இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே ஈஸியா தேங்காய் லட்டு செய்யுங்கள். 10 நிமிடத்தில் தேங்காய் லட்டு செய்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
- துருவிய தேங்காய் -2 கப்
- பால் - 3/4 லிட்டர்
- ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
- சர்க்கரை - 1/2 கப்
- நெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாயில் நெய் சேர்த்து தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். உலர்ந்த தேங்காய் வைத்தும் செய்யலாம். முன்னதாக ரவை 1/4 கப் போட்டு இதோடு வறுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் ரவை சேர்த்கக் கொள்ளலாம். தேங்காய் பொன்னிறமாக வந்தவுடன் அதில் பால் சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து சர்க்கரை சேர்த்து கிளறி, ஏலக்காய் தூள் சேர்த்து
அடுப்பை அணைத்து விடலாம். சுவைக்காக முந்திரி, திராட்டை நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்து, கைகளில் சிறிது நெய் தடவி, கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து லட்டு உருண்டை பிடிக்கவும். அவ்வளவு தான் லட்டுகளுக்கு மேல் முந்திரி வைத்து அலங்கரித்து பரிமாறலாம். 10 நிமிடத்தில் தீபாவளி லட்டு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“