அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் 70 மி.லி தேங்காய் பாலுடன் கொஞ்சம் சீரகத் தூள், மஞ்சள் கலந்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் அல்சரை சரி செய்யும் என்று டாக்டர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார்.
தமிழ்நாட்டில் பொதுவாக சமையலில் தேங்காய் பயன்படுத்துவது என்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால், இடையில் பரவிய சில தவறான தகவல்களால் தேங்காயை தவிர்க்கத் தொடங்கினர். ஆனால், தேங்காயில் அற்புதமான பலன்கள் உள்ளன என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது, அது பாதிப்பையும் ஏற்படுத்தும். இதைத்தான் தமிழில், ‘அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு’ என்று கூறியிருக்கிறார்கள்.
பாலில் உள்ள லேக்டோஜென் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் அல்லது ஒத்துக்கொள்ளாது, சிலருக்கு பிடிக்காது, அவர்கள் பாலுக்கு பதிலாக தேங்காய் பால் எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார். மேலும், தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் தாய்பாலுக்கு நிகரான சத்துகளைக் கொடுக்ககூடியது என்று கூறுகிறார்.
டிரடிசல் கேர் ஹெல்த் (Traditional Care Hospital) யூடியூப் சேனலில் டாக்டர் ராஜலட்சுமி கூறுகையில், தேங்காய் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு சிறந்த உணவு என்று கூறுகிறார். மேலும், அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் 70 மி.லி தேங்காய் பாலுடன் கொஞ்சம் சீரகத் தூள், மஞ்சள் கலந்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் அல்சரை சரி செய்யும் என்று டாக்டர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார்.
அதே போல உணவுக்கு பின்னும், தேங்காய் பால் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். நீண்ட நாட்கள் தூக்கம் வரவில்லை என்று கூறுபவர்கள். கசகசாவை அரைத்து அதனுடைய பாலை 30 மி.லி எடுத்துக்கொண்டு அதில், 90 மி.லி தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வரும். இதை தொடர்ந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. இதுவும் ஒரு போதைப்பொருள் போலதான் என்று டாக்டர் ராஜலட்சுமி கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல், தேங்காய் பாலுக்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மை இருக்கிறது. தொடர்ந்து இருமல் இருப்பவர்கள், தேங்காய் பாலுடன் மஞ்சள், மிளகு சேர்த்து கொடுக்கலாம் என்று டாக்டர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.