வெறும் ரசம் சாப்பிட்டு போர் அடிக்குதா? இனி இப்படி செஞ்சு பாருங்க; 2 தட்டு சோறு காலியாகும்!
வெறும் தக்காளி ரசம், மிளகு ரசம் சாப்பிட்டு போர் அடிக்குதா, வித்தியாசமாக ரசத்தை இனி இப்படி செய்து பாருங்கள், அந்த ரசத்தின் சுவையில் 2 தட்டு சோறு காலியாகும் அளவுக்கு சாப்பிடுவீர்கள்.
வெறும் தக்காளி ரசம், மிளகு ரசம் சாப்பிட்டு போர் அடிக்குதா, வித்தியாசமாக ரசத்தை இனி இப்படி செய்து பாருங்கள், அந்த ரசத்தின் சுவையில் 2 தட்டு சோறு காலியாகும் அளவுக்கு சாப்பிடுவீர்கள்.
வெறும் தக்காளி ரசம், மிளகு ரசம் சாப்பிட்டு போர் அடிக்குதா, உங்களுக்காக மாதம்பட்டி ரங்கராஜ் தேங்காய்ப் பாலில் ரசம் செய்து காட்டியுள்ளார். screengrab form YouTube @mrshomefoodproduct
வெறும் தக்காளி ரசம், மிளகு ரசம் சாப்பிட்டு போர் அடிக்குதா, வித்தியாசமாக ரசத்தை இனி இப்படி செய்து பாருங்கள், அந்த ரசத்தின் சுவையில் 2 தட்டு சோறு காலியாகும் அளவுக்கு சாப்பிடுவீர்கள். மாதம்பட்டி ரங்கராஜ் செய்து காட்டியுள்ள ரசம் அப்படி என்ன ரசம், எப்படி செய்வது பாருங்கள்.
Advertisment
வெறும் தக்காளி ரசம், மிளகு ரசம் சாப்பிட்டு போர் அடிக்குதா, உங்களுக்காக மாதம்பட்டி ரங்கராஜ் தேங்காய்ப் பாலில் ரசம் செய்து காட்டியுள்ளார். இதை மிசஸ் ஹோம் ஃபூட் புராடக்ட் (@mrshomefoodproduct) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர். முதலில் ரசப்பொடி வறுப்பது போல, 2 பட்டை 10 கிராம்பு, 10 ஏலக்காய், கொஞ்சம் சோம்பு, கொஞ்சம் குறுமிளகு, கொஞ்சம் சீரகம், கொஞ்சம் வரமல்லி, 2 வறமிளகாய், கொஞ்சம் கருவேப்பிலை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். வறுத்தபின், சின்ன உரலில் போட்டு இடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
நாட்டுத்தக்காளியை நன்றாக கட்பண்ணி, பிழிந்துகொள்ளுங்கள். அடுத்து தேங்காய் பால் ரசம் செய்ய ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள். கொஞ்சம் கடுகு, வறமிளகாய், கருவேப்பிலை, கொஞ்சம் மஞ்சள்தூள், பச்சை மிளகாய் பாதியாகக் கட் பண்ணி போடுங்கள், தக்காளியை ஊற்றுங்கள், 6 சின்ன வெங்காயம், 2 பல்லு பூண்டு போட்டு இடித்து 1 ஸ்பூன் அளவு போடுங்கள், எல்லா வதங்கிய பிறகு தேங்காய் பால் ஊற்றுங்கள். போதுமான அளவு தண்ணீர் ஊற்றுங்கள். பின்னர் கொதிக்க விடாமல் கொத்தமல்லி தழை தூவி விட்டால், அவ்வளவுதான் சூப்பரான சுவையான தேங்காய் பால் ரசம் தயார். சாப்பிட்டு பாருங்க 2 தட்டு சோறு காலியாகும், அந்த அளவுக்கு சாப்பிடுவீர்கள்.