வயிற்றுப் புண்களை ஆற்றுவதில் தேங்காய் மிகவும் சிறந்த உணவு. உடலை குளிர்வித்து வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடிய மிகச்சிறந்த உணவு தேங்காய் பால் ஆகும். தேங்காய் பாலுக்கு மட்டும் தான் குடலில் புண்களை ஆற்றக்கூடிய பெரும் பங்கு உள்ளது.
மணத்தக்காளி கீரையை தாண்டி தேங்காய் பாலுக்கு மிகவும் பங்கு உண்டு தொடர்ந்து தேங்காய் பாலை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள் சேர்த்து எடுத்துக் கொண்டால் படிப்படியாக வயிற்றுப்புண்ணை குணப்படுத்தலாம்.
இப்படியாக ஒரு மருந்தாக நம் வாழ்வியலில் இருக்க வேண்டிய ஒரு பொருள் தேங்காய் ஆகும். அதிக உடல் எடை ரத்த கொதிப்பு உள்ளவர் இதை தவிர்க்கலாம். அப்படிப்பட்ட தேங்காய் பால் ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மிளகு
சீரகம்
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
பூண்டு
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய்
தக்காளி
உப்பு
மஞ்சள் தூள்
பெருங்காயத்தூள்
புளிக்கரைசல்
கொத்தமல்லி தழை
தேங்காய் பால்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் பூண்டு சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு அதில் சிறிது கருவேப்பிலையையும் சேர்த்து தக்காளி உப்பு போட்டு வேக வைக்கவும்.
மாதம்பட்டி ரங்கராஜ் ரெசிபி
பின்னர் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ளதையும் சேர்த்து தாளித்து புளிக்கரைசலை உற்றவும். சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி கொதி வந்ததும் அதில் தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால் தேங்காய் பால் ரசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“