குருமா - ரசம் சேர்ந்த ரெசிபி... சில நிமிடங்கள் போதும்; இப்படி செஞ்சு அசத்துங்க!

குருமாவையும் ரசத்தையும் சேர்த்து தேங்காய் பால் ரசம் செய்து பாருங்கள், ரொம்ப சுவையாகவும் புதுவிதமாகவும் இருக்கும். குருமா - ரசம் சேர்ந்த தேங்காய் பால் ரசம் ரெசிபி சில நிமிடங்களிலேயே செய்து விடலாம். ட்ரை பண்ணி பாருங்கள்.

author-image
WebDesk
New Update
coconut

இந்த தேங்காய் பால் ரசத்தை மிஸஸ் ஹோம் ஃபுட் புராடக்ட் (@mrshomefoodproduct) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர்.

குருமாவையும் ரசத்தையும் சேர்த்து தேங்காய் பால் ரசம் செய்து பாருங்கள், ரொம்ப சுவையாகவும் புதுவிதமாகவும் இருக்கும்.  குருமா - ரசம் சேர்ந்த தேங்காய் பால் ரசம் ரெசிபி சில நிமிடங்களிலேயே செய்து விடலாம். ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment

இந்த கோடை விடுமுறையில் சமையலில் ஏதாவது புதுசா செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா, அப்படியென்றால், குருமா - ரசம் சேர்ந்த தேங்காய் பால் ரசம் ரெசிபி செய்து பாருங்கள். இந்த தேங்காய் பால் ரசத்தை மிஸஸ் ஹோம் ஃபுட் புராடக்ட் (@mrshomefoodproduct) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர்.

குருமா - ரசம் சேர்ந்த தேங்காய் பால் ரசம் செய்முறை:

Advertisment
Advertisements

முதலில் ஸ்டவ்வைப் பற்ற வைத்து அதில் ஒரு வானலியை வையுங்கள், அதில், பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், வரகொத்தமல்லி, மிளகாய், கருவேப்பிலை போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு, அதை எடுத்து, உரலில் போட்டு இடித்து தூளாக்கி எடுத்துக்கொள்ளுங்கள். 

அடுத்து, ஒரு பாத்திரத்தில் 2 தக்காளியை கைகளால் மசித்து எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, 10 சின்ன வெங்காயம், 8 பூண்டு பல்லு, சின்ன உரலில் போட்டு இடித்து எடுத்துக்கொள்ளுங்கள். 

இப்போது, ஒரு பெரிய வானலியை வைத்து அதில் சமையல் எண்ணெய் ஊற்றுங்கள், எண்ணெய் காய்ந்ததும் கொஞ்சம் கடுகு போடுங்கள், 2 வரமிளகாய் போடுங்கள், கருவேப்பிலை ஒரு கொத்து போடுங்கள். பெருங்காயம் கொஞ்சம் போடுங்கள், மஞ்சள் தூள் கொஞ்சம் போடுங்கள், பிறகு, மசித்து வைத்த தக்காளியைப் போட்டு தாளியுங்கள். பிறகு இடித்து வைத்துள்ள மிளகு சீரகம் சேர்த்து 2 நிமிடம் வதக்கிக்கொள்ளுங்கள். 

பச்சை வாசனை போன பிறகு, 1 கப் அளவு தேங்காய் பால் ஊற்றுங்கள், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து அரை கப் அளவு தண்ணீர் ஊற்றுங்கள், கொதி வருவதற்கு முன்னால், கொத்தமல்லி தழைத் தூவி எடுத்தால், ஆரோக்கியமான தேங்காய் பால் ரசம் தயார். 

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: