கோயம்புத்தூர் பகுதியில் மிகவும் ஃபேமஸான தேங்காய் பால் ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பட்டை, கிராம்பு
ஏலக்காய்
சோம்பு
மிளகு
சீரகம்
வரமல்லி
வரமிளகாய்
பச்சை மிளகாய்
பூண்டு
சின்ன வெங்காயம்
கருவேப்பிலை
கொத்தமல்லி தழை
தேங்காய் பால்
தக்காளி
உப்பு
எண்ணெய்
தேங்காய் பால் ரசத்திற்கு முதலில் மசாலா செய்ய வேண்டும். அதற்கு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மிளகு, சீரகம், சேர்த்து வறுக்கவும். அதில் வரமல்லி மற்றும் வரமிளகாய், கருவேப்பில்லை சேர்த்து வறுக்க வேண்டும்.
அழுத்திப் பார்த்தால் உடையும் பதத்தில் இருக்க வேண்டும். பின்னர் வறுத்த மசாலாவை ஆற வைத்து மிக்ஸியில் அல்லது அம்மியில் பொடியாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி கையில் நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
ரசம் தாளிப்பதற்கான செய்முறையை பார்ப்போம்: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, வரமிளகாயை கிள்ளி போட்டு அதில் சிறிது கருவேப்பிலை, மஞ்சள் தூள், ஒரு பச்சை மிளகாய் நறுக்கி போட்டு அதில் பிசைந்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து சின்ன வெங்காயம் மற்றும் இரண்டு பல் பூண்டை தட்டி அதில் போட வேண்டும்.
பின்பு அனைத்தையும் நன்கு வதக்கி அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதங்கவிட வேண்டும். நன்கு வதங்கிய பின்னர் நாம் இடித்து வைத்த மசாலாவை அதில் சேர்த்து வதக்கவும். மசாலா நன்கு வதங்கியவுடன் அதில் தேங்காய் பாலை ஊற்ற வேண்டும்.
தேவையான அளவு உப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும். இந்த தேங்காய் பால் ரசத்தை சூப் மாதிரியும் குடிக்கலாம் இல்லையென்றால் சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“