வயிற்றுப் புண்ணை ஆற்றும் இந்த ரசம்... வெறும் 10 நிமிடம் போதும்: மாதம்பட்டி ரங்கராஜ் ரெசிபி

வயிற்றுப் புண்ணை ஆற்றக் கூடிய மருத்துவ குணம் வாய்ந்த தேங்காய் பால் ரசம், மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.

வயிற்றுப் புண்ணை ஆற்றக் கூடிய மருத்துவ குணம் வாய்ந்த தேங்காய் பால் ரசம், மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Coconut milk rasam

உணவு என்பது பசியை போக்குவதற்காக மட்டுமே இருக்கக் கூடாது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் மருத்துவ குணங்களும் இருப்பது அவசியம் ஆகும். அந்த வகையில், வயிற்றுப் புண்ணை ஆற்றக் கூடிய மருத்துவ குணம் வாய்ந்த தேங்காய் பால் ரசம், மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

மிளகு,
சீரகம்,
பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை,
பூண்டு,
எண்ணெய்,
கடுகு,
உளுந்தம் பருப்பு,
காய்ந்த மிளகாய்கள்,
தக்காளி,
உப்பு,
மஞ்சள் தூள்,
புளி கரைசல்,
தேங்காய் பால் மற்றும்
கொத்தமல்லி.

செய்முறை:

Advertisment
Advertisements

ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம், ஒரு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலைகள் ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்க வேண்டும்.  இத்துடன் நான்கு பூண்டு சேர்த்து மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அரைக்க வேண்டும்.  

இனி அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இதில் ஒரு ஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய்கள், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிய துண்டுகளாக நறுக்கிய ஒரு தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இதில் தக்காளி வதங்கிய பின்னர், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் முதலில் அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்க்கலாம்.  இதனை கிளறி விட்ட பின்னர், கரைத்து வைத்திருந்த புளிகரைசலை இதில் ஊற்ற வேண்டும்.

இது நன்றாக கொதிக்கும் போது சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலக்க வேண்டும். அடுப்பில் ரசம் கொதிக்கும் போது, அதில் தேங்காய் பால் ஊற்றலாம். இந்தக் கலவை ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கினால், மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் சுவையான தேங்காய் பால் ரசம் தயாராகி விடும்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: