பொதுவாக புளி ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் கேள்விப்பட்டிருப்போம், சாப்பிட்டிருப்போம். ரசம் ஜுரணம், செரிமானத்திற்கு உதவும். அந்த வகையில் இங்கு புதுவிதமாக தேங்காய்ப் பால் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இதில் இரும்பு சத்து, நார்ச்சத்து நிறைந்து உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
தேவையான பொருட்கள்
மிளகு- 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம்- 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் - அரை லிட்டர்
நெய் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு
கடுகு- 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1 டீஸ்பூன்
இஞ்சி- 1 டீஸ்பூன்
தக்காளி - 1
வெல்லம் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதாவு
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுக்க வேண்டும். அது ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மீண்டும் அடுப்பில் கடாய் வைத்து கடுகு சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும். அதில் இஞ்சி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தேங்காய்ப் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து கலக்கவும். இப்போது சில நிமிடங்களில் ரசம் கொதிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். அவ்வளவு தான் கம கம தேங்காய் பால் ரசம் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“