சுவையான தேங்காய் பால் சாதம் குக்கரில் செய்வது எப்படி என்று பார்ப்போம். குக்கரில் 2 விசில் வந்தால் போதும், தேங்காய் பால் சாதம் சிம்பிள் டிப்ஸ் இதோ உங்களுக்காக தருகிறோம்.
தேங்காய் பால் சாதம் குக்கரில் செய்வது எப்படி?
நீங்கள் தேங்காய் பால் சாதம் செய்யப்போகும் குக்கரை ஸ்டவ்வில் வைத்து அடுப்பை பற்ற வையுங்கள்.
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள், 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றுங்கள், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய் சேர்த்து வதக்குங்கள்.
ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வதங்குங்கள், 4 பச்சை மிளகாயைக் கீறி அதையும் சேர்த்து வதக்குங்கள். அடுத்து, முந்திரி பருப்பு போட்டு வதக்குங்கள்.
ஒரு பெரிய தக்காளியை நீள வாக்கில் அரிந்து அதையும் சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகிற வரை வதக்குங்கள்.
அடுத்து ஒரு கைப்பிடி அளவு புதினா, கொஞ்சமாக கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளுங்கள்.
அரிசி ஒரு பங்கு என்றால், தேங்காய் பால் இரண்டு மடங்கு சேக்க வேண்டும்.
அதனால், 3 கப் தேங்காய் பால் ஊற்றுங்கள். தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும், நாம் ஊற வைத்து வைத்திருக்கிற இதில் சேர்த்துக்கொள்ளலாம். அரிசியை சேர்த்து விட்ட பிறகு, அரை டீஸ்பூன் அளவு சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விடுங்கள்.
இதையடுத்து, குக்கரை மூடிபோட்டு சரியாக மூடிவிடுங்கள். மிதமான தீயில் 2 விசில் வந்தால் போதும் அருமையான, சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“