குக்கரில் குயிக் லஞ்ச் ரெசிபி... அரை மூடி தேங்காய் இருந்தால் போதும்; இப்படி அசத்தலாக செய்யலாம்!
அரை மூடி தேங்காய் இருந்தால் போதும் குக்கரில் தேங்காய் பால் சாதம் குயிக் லஞ்ச் ரெசிபி செய்து அசத்தலாம். குக்கரில் தேங்காய் பால் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம் வாங்க.
தேங்காய் பால் சாதத்தை குக்கரில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம். Image Source: screengrab from YouTube @tamilmanichannel8058
அரை மூடி தேங்காய் இருந்தால் போதும் குக்கரில் தேங்காய் பால் சாதம் குயிக் லஞ்ச் ரெசிபி செய்து அசத்தலாம். குக்கரில் தேங்காய் பால் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம் வாங்க.
Advertisment
தேங்காய் பால் சாதம் மிகவும் சுவையாக இருக்கும். இந்த தேங்காய் பால் சாதத்தை குக்கரில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம். இந்த தேங்காய் பால் சாதம், @tamilmanichannel8058 என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டப்பட்டுள்ளது. முதலில் ஸ்டவ்வைப் பற்ற வைத்து அதில் குக்கரை திறந்து வையுங்கள். அதில் 2 டீஸ்பூன் சமைய எண்ணெய் விடுங்கள். அடுத்து, 2 டீஸ்பூன் நெய் விடுங்கள். அடுத்து, பட்டை 3, பிரிஞ்சி இலை 3, ஏலக்காய் 2, அன்னாசிப் பூர் 2, கிராம்பு 5 போட்டு வதக்கி விடுங்கள்.
ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி போட்டு அதையும் வதக்குங்கள். அடுத்து, 4 பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி போடுங்கள். 7-8 முந்திரி பருப்பை உடைத்து சேர்த்துக்கொள்ளலாம். முந்திரியைம் சேர்த்து வதக்கிவிடுங்கள். அடுத்து ஒரு பெரிய தக்காளியை நறுக்கி போட்டு அதையும் வதக்கிக் கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
தக்காளி வதங்கியதும் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போட்டு, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அடுத்து, ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகள், கொஞ்சமாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடுங்கள்.
தேங்காய் பால் சாதத்துக்காக 1 1/2 கப் அரிசி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதால், அதற்கு 3 கப் தேங்காய் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த 3 கப் தேங்காய் பாலை குக்கரில் ஊற்றுங்கள்.
தேங்காய் பால் சேர்த்தபின் ஒரு கொதி வந்ததும், ஊறவைத்துள்ள அரிசியைக் கழுவி போடுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். அடுத்து, அரை டீஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு போடு நன்றாகக் கலந்து விடுங்கள். அடுத்து, குக்கரை மூடி விடுங்கள், ஸ்டவ்வை மிதமான தீயில் வையுங்கள். 2 விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் அருமையான தேங்காய் பால் சாதம் ரெடி. உங்கள் வீட்டில் இந்த தேங்காய் பால் சாதத்தை குக்கரில் குயிக் லஞ்ச் ரெசிபியாக செய்து பாருங்கள்.