தேங்காய் பால் அமிர்தத்திற்கு இணையானது. அதனை தினசரி குடிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
முதிர்ந்த தேங்காய்களின் சதையிலிருந்து பெறப்பட்ட தேங்காய் பால், உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் சேர்க்க பயன்படுகிறது. இது உணவுகளுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், பலவிதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
தேங்காய் பாலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. தேங்காய் பாலில் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் உள்ளது, இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் புற்றுநோய் மற்றும் இதய நோய்களைத் தடுக்கிறது.
தினசரி தேங்காய் பால் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுவது குறையும். மேலும் தொண்டை முதல் வயிறு வரை உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்ய தேங்காய் பால் உதவும்.
மார்பக புற்றுநோய்க்கு கூட தேங்காய் பால் ஒரு அருமருந்தாகும். தேங்காய்ப் பால் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயை உண்டாக்கும் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
தேங்காய் பாலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன.
அவை குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி நல்ல பாக்டீரியாக்களை சமநிலை படுத்த உதவுகிறது. வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளவர்கள் தொடர்ந்து தேங்காய் பால் குடித்து வர விரைவில் குணமாகும்.
சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் தேங்காய் பால் குடிக்கலாம் என மருத்துவர் கௌதமன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“