Advertisment

டீ, காபிக்கு பதிலாக தேங்காய் பால் குடிங்க…அவ்ளோ நன்மை இருக்கு; டாக்டர் கௌதமன்

டீ, காபிக்கு பதிலாக தேங்காய் பால் குடிப்பதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது என்று டாக்டர் கௌதமன் கூறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coconut milk

தேங்காய் பாலின் நன்மைகள்

உணவே மருந்து பாரம்பரியமாக நம் சமூகத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய உணவுகள், நம்மால் மறக்கப்பட்ட உணவுகள் இன்றைக்கு ஆராய்ச்சி பூர்வமாக உடலின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கின்ற உணவுகளாக வெளிக்கொணரப்படும் போது நாம் மீண்டும் அந்த உணவுகளை பயன்படுத்த ஆரம்பிக்கிறோம்.

Advertisment

இன்றைக்கு நம் பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம் நம் தாய்க்கு இருப்பதில்லை. தாய்க்கு இருக்கும் ஆரோக்கியம் நமக்கு இருப்பதில்லை என்பதுதான் உண்மை. இன்றைக்கு இதய நோய் முதல் சர்க்கரை நோய் வரை, புற்றுநோய் முதல் மூளையை பாதிக்கின்ற மறதி நோய் வரை தடுக்கக்கூடிய ஒரு அழகான அருமருந்து தேங்காய்ப்பால் ஆகும்.

ஒவ்வொரு நாளும் காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர் கௌதமன் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு பதிலாக அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பானமான தேங்காய் பால் குடிக்க அவர் பரிந்துரைக்கிறார்.

தேங்காய் பால் நம் வாயில் இருக்கும் சில கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, நமது ஈறுகள் மற்றும் பற்களை நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

Advertisment
Advertisement

இதில் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் தேங்காய் செரிமானத்தை மேம்படுத்த உதவும். தேங்காய் பால் புற்றுநோய்க்கு நன்மை பயக்கும். மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.

தேங்காய்ப் பால் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயை உண்டாக்கும் உயிரணுக்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.100 கிராம் தேங்காய் பாலில் கலோரிகள், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, சாச்சுரேட்டட் கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவை உள்ளன.

அல்சரால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், வயிறு மற்றும் குடலில் ஏற்படும் புண்களை சரிசெய்யும் மிகச்சிறந்த அருமருந்தாக தேங்காய்ப்பால் உள்ளது.

தேங்காய் பால் எந்தெந்த நோய்களுக்கு சிறந்த பலனை தருகிறது? விவரிக்கிறார் டாக்டர்.கௌதமன் அவர்கள்

அல்சருக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை விட வயிற்றுப் புண்ணை தேங்காய் பால் மிக வேகமாக ஆற்றும் என மருத்துவர் கௌதமன் கூறுகிறார். இதிலுள்ள ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் குடலில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Coconut Milk Ayurvedic qualities of coconut
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment