அனைத்து மகிழ்ச்சியான தருணங்களிலும் இனிப்பு முக்கிய பங்கு வகிக்கும். பிறந்தநாள், வீட்டுவிசேஷம், பண்டிகை காலம் என எல்லா நாட்களிலும் வீட்டிலோ அல்லது கடைகளிகலோ இனிப்பு வாங்கி பகிர்ந்து உண்டு மகிழ்வோம். மற்றவர்களுடன் பகிர்ந்து சாப்பிடுவதில் கூடுதல் மகிழ்ச்சி பொங்கும். அந்தவகையில் இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே ஈஸியாக, சுவை நிறைந்த தேங்காய் ரவா கேக் செய்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
பால் – 1 1/4 கப்
கோகோ பவுடர் – 1 கப்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவியது – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
உப்பு சேர்க்காத வெண்ணெய் – 1/4 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
செமோலினா – 1 கப்
ரவா – 1/2 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து பால், வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும். அடுத்து கோகோ பவுடர், சிறிது உப்பு சேர்க்கவும். செமோலினாவை சேர்க்கவும். ரவையை சேர்க்கவும் . இப்போது எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுக்கம் பதத்திற்கு வரவேண்டும். அடுத்ததாக, இந்த கலவை எடுத்து, பேக்கிங் டின்னில் வைத்து 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். பின்னர், துருவிய தேங்காயை கடாயில் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதை ஏற்கனவே உள்ள கலவையுடன் சேர்த்து கலக்கவும். இப்போது வெண்ணெய் தடவிய டிரேயில் வைத்து ஃபாயில் பேப்பர் போட்டு மூடி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்தால் கேக் ரெடி. சிறிய துண்டுகாக கட் செய்து சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/