கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க வேண்டிய ஈஸியான ஒரு ஸ்வீட் பற்றி பார்போம். வெறும் தேங்காய் மற்றும் ரவை வைத்து ஒர் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
Advertisment
தேவையான பொருட்கள்
நெய் முந்திரி திராட்சை ரவை துருவிய தேங்காய் சர்க்கரை காய்ச்சி ஆறவைத்த பால் ஏலக்காய் தூள்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு சிறிய வாணலியில் நெய் சேர்க்கவும். முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் திராட்சையும் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். ஒரு அகலமான கடாயில் நெய் சேர்த்து ரவை சேர்க்கவும். ரவையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் நெய் சேர்த்து, துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். தேங்காயில் உள்ள ஈரம் எல்லாம் போய் நிறம் மாறிய பிறகு, வறுத்த ரவையை சேர்த்து, தீயைக் குறைத்து வைத்து நன்றாகக் கலக்கவும்.
அடுத்து சர்க்கரையை எடுத்து சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். 2-3 நிமிடங்களுக்குப் பிறகு காய்ச்சி ஆறிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். நன்றாக கலக்கவும். கடைசியாக நெய், ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும்.
ரவா தேங்காய் கலவையை ஒரு தட்டில் மாற்றவும். உள்ளங்கையில் சிறிது நெய் தடவி, லட்டு கலவை சற்று சூடாக இருக்கும் போது, கலவையின் ஒரு பகுதியை எடுத்து விரும்பிய வடிவத்தை பிடித்து, அதே முறையில் மீதமுள்ள கலவையை செய்யவும். சுவையான ரவா லட்டு பரிமாற தயாராக உள்ளது.