குழந்தைகள் விரும்பும் வகையில் வீட்டிலேயே எளிய முறையில் இளநீர் ஜெல்லி செய்யலாம். இந்த இளநீர் ஜெல்லி வித்தியாசமாகவும், குழந்தைகள் நிச்சயம் விரும்பும் வகையிலும் இருக்கும். வாங்க இந்த இளநீர் ஜெல்லி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடல்பாசி- 10 கிராம்
இளநீர்- 1
உப்பு- ஒரு சிட்டிகை
சர்க்கரை- 100 கிராம்
செய்முறை:
* கடல்பாசியை நீரில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 250 கிராம் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ந்ததும் ஊறவைத்த கடல்பாசியை அதில் சேர்க்க வேண்டும். அதில் ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
* அதன்பிறகு 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு அதில் இளநீரை சேர்க்க வேண்டும். அதனுடன் இளநீநில் உள்ள வழுக்கைகளை நீட்ட நீட்டமாக வெட்டி அதில் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கிளறி ஒரு தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். ஆறியதும் ஜெல்லி பதத்தில் இருக்கும் இளநீர் ஜெல்லிகளை சதுரம் சதுரமாக வெட்டி பரிமாறவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் சாப்பிடலாம்.