இந்த தேங்காய் திரட்டு பால் ஸ்வீட்டை வாயில் வைத்தால் அப்படியே கரைந்துவிடும். இது ஒரு பாரம்பரிய ஸ்வீட் வகை.
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவியது – 4 கப்
பாசிப் பருப்பு – அரை கப்
ஏலக்காய்
முந்திரி பருப்பு
நெய்
செய்முறை : 6 முதல் 7 தேங்காய் துருவ வேண்டும். தொடர்ந்து அரை கப் பாசி பருப்பை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து துருவிய தேங்காய் மற்றும் பாசி பருப்பு, ஏலகாய் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு மண் சட்டியில் நெய் ஊற்றி இந்த தேங்காய் பால் கலவையை சேர்க்க வேண்டும். தொடர்ந்து அதை கிண்ட வேண்டும். நன்றாக அல்வா பதத்திற்கு வரும்போது, வறுத்த முந்திகளை சேர்க்க வேண்டும். இந்த கலவை ஆறியதும், அதை சின்ன, சின்ன சதுரங்களாக வெட்டி பரிமாறலாம். சுவையான தேங்காய் திரட்டு பால் ரெடி.