scorecardresearch

காப்பியுடன் கொஞ்சம் நெய்: இதை குடித்தால் உடல் எடை குறையுமா?

சில உணவு வகை அல்லது பானங்கள் திடிரேன டிரெண்டாகும். இந்த வகையில் புதிதாக ஒரு வகை காப்பி டிரண்டாகி வருகிறது. இந்நிலையில் நாம் குடிக்கும் பால் சேர்க்காத காப்பியில் வெண்ணை அல்லது பட்டர் சேர்த்து சாப்பிடலாம் என்ற கீட்டோ டயட்டில் சொல்லப்பட்டதாக ஒரு வருடத்திற்கு முன்பாக டிரெண்டானது. இந்நிலையில் தற்போது காப்பியில் நெய் அல்லது ஆலிவ் எண்ணெய் என்று மாற்றமடைந்திருக்கிறது. இதை புல்லட் புரூப் காப்பி என்று கூறுகிறார்கள்.

குறிப்பாக வெண்ணை உணவு செரிமானத்தை குறைக்கும். காப்பியின் புத்துணர்ச்சி தாக்கத்தை அதிகப்படுத்தும். இதனால் பசி எடுப்பது குறையும். இதில் நன்மைகள் இருந்தாலும், அதில் அதிகமாக சாச்சுரேட்ட  கொழுப்பு சத்து அதிகம். இந்நிலையில் காப்பியுடன நெய்யும் சேர்ந்து சாப்பிட்டல் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காப்பி மற்றும் நெய் என்ற காம்போவுக்கும் இதுபோல நல்ல பலன்களும், சில குறைபாடும் இருக்கிறது. இந்நிலையில் காப்பியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது.  இது நமது மூளையை யோசிக்க தூண்டுகிறது. ஆனால் நெய்யில் சச்சுரேடட் கொழுப்பு  அதிகம் இருக்கிறது.

ஆனால் அனைவராலும் காப்பியில் நெய் கலந்து சாப்பிட முடியாது. இது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். இதை இரண்டையும் சேர்த்தால் அதிக கலோரிகள் ஆகிவிடும்.  இந்நிலையில் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் உடலுக்கு காசியம் சத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் ஓமேகா 3, 6 மற்றும் 9 இருக்குறது. 100 கிராம் நெய்யில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் ஏ இருக்கிறது. மேலும் 14%  வைட்டமின் இ, 11%  வைட்டமின் கே கிடைக்கிறது.

இந்நிலையில் இது உங்கள் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால், இதை குடிக்கலாம்.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Coffee with ghee or olive oil in the morning